பழம்பெரும் தொழிலதிபர் கோபிசந்த் இந்துஜா காலமானார்

39பார்த்தது
பழம்பெரும் தொழிலதிபர் கோபிசந்த் இந்துஜா காலமானார்
இந்தியாவின் பழம்பெரும் கூட்டு தொழில் நிறுவனமான இந்துஜா குழுமத்தின் தலைவர், கோபிசந்த் இந்துஜா (85) வயது முதிர்வு காரணமாக காலமானார். இக்குழுமம் 1914-ஆம் ஆண்டு மும்பையில் தொடங்கப்பட்டு, அங்கிருந்து பல்வேறு உலக நாடுகளில் தனது தொழில் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தியது. கனரக வாகன உற்பத்தியில் முன்னோடியான அசோக் லேலண்ட் வாகனங்கள் இந்த குழுமத்திற்கு சொந்தமானவை ஆகும். பிரிட்டனில் வசித்து வந்த கோபிசந்த் இந்துஜா, கடந்த 2023-ஆம் ஆண்டு இந்த குழுமத்தின் தலைவர் பொறுப்பை ஏற்று வழிநடத்தி வந்தார்.

தொடர்புடைய செய்தி