சட்டமன்றமா? பிக் பாஸ் நிகழ்ச்சியா? - சீமான்

40பார்த்தது
சட்டமன்றமா? பிக் பாஸ் நிகழ்ச்சியா? - சீமான்
தமிழக சட்டமன்றம் பிக் பாஸ் நிகழ்ச்சி போல செயல்படுவதாக மக்கள் கூறுவதாக மதுரையில் இன்று (செப்.1) நடைபெற்ற மூவர் நினைவேந்தல் கூட்டத்தில் பேசிய நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்தார். தவெக MLA-க்களுக்கு கல்லூரிக்கும் பல்கலைக்கழகத்திற்கும் இடையே உள்ள வித்தியாசமே தெரியவில்லை என்றும், அவர்களை 'தற்குறி' என்று அழைப்பதே பெரிய அங்கீகாரம்தான் என்றும் சாடினார். மேலும், அவையில் முதல்வர் சிரிப்பதை பார்க்க தனி திரை வைக்க வேண்டும் என்று MLA ஒருவர் கோருவது கேலிக்கூத்தாக உள்ளது என்றும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி