எலுமிச்சை விலை கடும் சரிவு.. விவசாயிகள் வேதனை

0பார்த்தது
எலுமிச்சை விலை கடும் சரிவு.. விவசாயிகள் வேதனை
தென்காசி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்யப்படும் எலுமிச்சை பழங்கள், அண்டை மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கோடை காலத்தில் கிலோ ரூ.150 முதல் ரூ.250 வரை விற்ற பழங்கள், தொடர் மழையால் தற்போது கிலோ ரூ.20 முதல் ரூ.80 வரை மட்டுமே விற்பனையாகின்றன. இதனால் விவசாயிகள் கடும் பொருளாதார இழப்பை சந்தித்து வருகின்றனர். தமிழக அரசு தலையிட்டு தொழிற்சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.