அகில் அக்கினேனியின் 'லெனின்' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

3528பார்த்தது
அகில் அக்கினேனியின் 'லெனின்' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
நடிகர் அகில் அக்கினேனி நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற 'லெனின்' தெலுங்கு திரைப்படம், வரும் ஆக.7-ம் தேதி முதல் ஜீ5 ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது. இயக்குநர் முரளி இயக்கத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடித்த இப்படம், 1990-களின் கிராமப்புற பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ளது. 'ஏஜென்ட்' படத்தின் தோல்விக்கு பிறகு அகில் அக்கினேனிக்கு மிகப்பெரிய கம்பேக் படமாகவும், அவரது திரைப்பயணத்தில் அதிக வசூல் செய்த திரைப்படமாகவும் 'லெனின்' அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி