'கூட்டமா வருவோம்.. சம்பவம் செய்வோம்' வைரல் வீடியோ

4548பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தமிழக, கேரள எல்லைப் பகுதியான மறையூரில், கடந்த சில தினங்களாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, தேயிலைத் தோட்டப் பகுதிகளிலும், குடியிறுப்பு பகுதிகளிலும் யானைகள் கூட்டமாக வரத் தொடங்கியுள்ளன. இதனால் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர். தற்போது யானைகள் கூட்டம் கூட்டமாக நடமாடும் கழுகுப் பார்வை காட்சி வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி