சர்வதேச தாய்மொழி தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “மனிதனின் சிந்தனை, உணர்வு, படைப்பாற்றல் அனைத்தும் தாய்மொழி வழியாகவே மலர்கின்றன. தாய்மொழியை அடிப்படையாகக் கொண்டு பன்மொழிக் கற்றலை வளர்ப்போம். நம் தொன்மையான தமிழ் மொழியை உலகறியச் செய்வோம். தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவட்டும். நம் தாய்மொழி தமிழின் பெருமை தலைமுறைகளைத் தாண்டி ஒலிக்கட்டும்” என குறிப்பிட்டுள்ளார்.