முன்னாள் தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 103-வது பிறந்தநாள் இன்று (ஜூன் 3) கொண்டாடப்படுகிறது. மாநில உரிமைகளை காத்த தமிழின தலைவரான கலைஞரின் புகழை போற்றி, முதல்வர்
மு.க.ஸ்டாலின் வழியில் மக்கள் பணியையும் கட்சி பணியையும் தொடர வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி
ஸ்டாலின் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும், மக்கள் நலம் பேணவும், கழக பணிகளை தொய்வின்றி முன்னெடுக்கவும் அனைவரும் உறுதியேற்போம் என்றும் அவர் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.