தேச தந்தை மகாத்மா காந்தியின் 157-வது பிறந்த இன்று (அக்.2) கொண்டாடப்படுகிறது. அகிம்சை என்னும் ஒற்றை ஆயுதத்தால் உலக வல்லரசை அசைத்து பார்த்த அறத்தின் திருவுருவமாகவும், சமத்துவம், எளிமை, சத்தியம் ஆகியவற்றை தன் மூச்சாக கொண்டு செயல்பட்ட மாமனிதராகவும் காந்தியடிகளை அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் புகழ்ந்துள்ளார். மேலும், ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாய் திகழ்ந்த அண்ணல் காந்தியடிகள் காட்டிய சத்திய பாதையில் வழுவாது நின்று, அறவழியில் என்றென்றும் பயணிப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.