மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) உலகளாவிய அளவில் நடைபெறும் யூனிவர்சல் போஸ்டல் யூனியன் (UPU) 2026 சர்வதேச கடிதம் எழுதும் போட்டியில் பள்ளிகள் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் மாணவருக்கு ரூ.50,000 பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. இந்த போட்டி ஆங்கிலம் அல்லது இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள எந்த ஒரு அங்கீகரிக்கப்பட்ட மொழியிலும் எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளது.