மதுராந்தகம் தேர்தல் பரப்புரையில் முதல்வர் விஜய்யை
திமுக தலைவர்
மு.க.ஸ்டாலின் மிகக் கடுமையாகக் கிண்டல் செய்துள்ளார். "மனித நடமாட்டமே இல்லாத சந்துபொந்துகளைக் கூட விடாமல் ஊர்வலம் போகிறார். உங்க பயம் எனக்குப் புடிச்சிருக்கு CM சார்! 5 நிமிடம் பேசினாலே அகிலமே ஆடும் என்றார்கள்; இன்று ஓட்டு வாங்க குட்டிக்கரணம் அடிக்கிறார். எப்போதும் 'வாழ்க்கை ஒரு வட்டம்டா' என வசனம் பேசுவார்; அது வேறு யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, அவருக்குத்தான் சூப்பராகப் பொருந்துகிறது" என விளாசியுள்ளார்.
நன்றி: சன் நியூஸ்