மலை மாவட்டங்களில் நாளை லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

19பார்த்தது
மலை மாவட்டங்களில் நாளை லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நாளை (மார்ச்.3) தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் இதர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என குறிப்பிடப்பட்டுள்ளது. கோடை வெயில் படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில், இந்த திடீர் மழை சற்று ஆறுதலை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி