சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே வேப்பிலை ஊராட்சி செக்காரப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி மாதையன் (50). இவர் தனது தோட்டத்தில் வளர்த்து வந்த 15 செம்மறி ஆடுகள் நேற்று (மே 23) மீது மின்னல் தாக்கி உயிரிழந்தன. குண்டுகல் மற்றும் ஒலக்கூர் பகுதிகளில் பெய்த கனமழையால் 500-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்தன. மேலும், பல்வேறு பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் உடைந்து விழுந்தன. மின்வாரிய ஊழியர்கள் சேதமடைந்த மின்கம்பங்களை மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.