அதிமுக ஆட்சிக் காலத்தில் அறிமுகமான ‘அம்மா பேட்ரோல்’ திட்டம், பின்னர் திமுக ஆட்சியில் ‘பிங்க் பேட்ரோல்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டதாக அதிமுக குற்றஞ்சாட்டியுள்ளது. தற்போது தவெக ஆட்சியில் அதே திட்டத்திற்கு ‘சிங்கப்பெண் அதிரடி படை’ என புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும், இது வெறும் ஸ்டிக்கர் மாற்ற அரசியல் மட்டுமே எனவும் அதிமுக கடுமையாக விமர்சித்துள்ளது. திட்டத்தின் பெயர் மட்டும் மாறுகிறது, செயல்பாடுகளில் புதுமை இல்லை என்றும் எதிர்க்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.