சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கென மேலும் 18 போலீசாரை நியமித்து தமிழக காவல்துறை உத்தரவிட்டுள்ளது. 2 உதவி ஆய்வாளர்கள் உள்பட 18 போலீசாரை சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கென்று நியமிக்கப்பட்டுள்ளது. பெண்களின் பாதுகாப்புக்கான சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை திட்டம் விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது. சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு எஸ்பி, டிஎஸ்பிக்கள், காவல் ஆய்வாளர்கள், உள்ளிட்டோர் நியமிக்கப்படுகின்றனர்.