இந்தியாவில் உரிய அங்கீகாரம் இன்றி செயல்பட்ட 32 போலி கல்வி நிறுவனங்களை University Grants Commission (யு.ஜி.சி.) கண்டறிந்துள்ளது. கொரோனா பிறகு ஆன்லைன் மூலம் பட்டம் வழங்குவதாக கூறி பல மோசடிகள் நடந்தது தெரியவந்தது. இதையடுத்து நாடு முழுவதும் ஆய்வு நடத்தப்பட்டதில், ஒரே கட்டிடத்தில் பல போலி பல்கலைக்கழகங்கள் இயங்கியது வெளிச்சத்துக்கு வந்தது. மாணவர்கள் சேர்வதற்கு முன் அங்கீகாரம் சரிபார்க்க யு.ஜி.சி. அறிவுறுத்தியுள்ளது.