சென்னை நங்கநல்லூரில் மின் கம்பி அறுந்து லோடு வாகனத்தின் மீது விழுந்ததில், வாகனம் தீப்பற்றியது. இதையடுத்து தீயை அணைக்க முயன்ற ராஜ்குமார் (31) என்பவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். மின் கம்பி அறுந்து விழுந்ததற்கான காரணம் குறித்து மின்வாரிய அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.