வீட்டு வசதி வாரியத்தில் மலிவு விலையில் வீடு வாங்கிய பலரும் தவணை கட்டத் தவறியதால் அபராத வட்டியுடன் சேர்ந்து கடன் சுமை அதிகரித்துள்ளது. அவர்களுக்கான அபாரத வட்டியை தள்ளுபடி செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது 2015ஆம் ஆண்டு மார்ச் 31-க்கு முன்னர் தவணை காலம் முடிவடைந்த வீட்டுவசதி வாரிய திட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும் என கூறப்படுகிறது. இந்த சலுகை இந்த மாதம் 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.