தமிழகத்தில் நலிவடைந்த மகளிர் மின்சார (EV) ஆட்டோ வாங்குவதற்காக கூட்டுறவு வங்கிகளில் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்கும் திட்டம் நடப்பு ஆண்டிற்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு 600 பெண்கள் பயனடைந்த இத்திட்டத்தின் கீழ் பயன்பெற, வருமான சான்று, குடும்ப அட்டை, அடையாள ஆவணங்கள் மற்றும் EV ஆட்டோ விலை மதிப்பீடு ஆகியவற்றுடன் கூட்டுறவு வங்கி அதிகாரிகளை அணுக தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.