திருவனந்தபுரத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த கேரள மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஷாஜஹான், கேரளத்தில் டிசம்பர் 9, 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று அறிவித்துள்ளார். மேலும், வேட்புமனு தாக்கல் செய்ய நவம்பர் 21 ஆம் தேதி கடைசி நாள் எனவும், வேட்புமனு பரிசீலனை நவம்பர் 22 ஆம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை டிச. 13 ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.