நெல்லையில் அய்யா வைகுண்ட சுவாமியின் 194-வது அவதார திருவிழாவை முன்னிட்டு மார்ச்.4-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுவாமி தோப்பு தலைமை பதியில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் இந்த விழாவில், சுற்றியுள்ள மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வது வழக்கம். இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் மார்ச்.14-ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.