நாகை மாவட்டத்திற்கு வரும் 8ம் தேதி உள்ளூர் விடுமுறை

34பார்த்தது
நாகை மாவட்டத்திற்கு வரும் 8ம் தேதி உள்ளூர் விடுமுறை
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய திருவிழாவை முன்னிட்டு, நாகை மாவட்டத்திற்கு வரும் செப்டம்பர் 8-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. திருவிழாவில் பங்கேற்கும் பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் வசதியை கருத்தில் கொண்டு இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாளுக்கான மாற்று வேலைநாள் குறித்த அறிவிப்பு மாவட்ட நிர்வாகத்தால் பின்னர் தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி