தஞ்சாவூர் மாவட்டத்துக்கு மார்ச் 2ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று (பிப்., 26) அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'கும்பகோணம் மாசி மக திருவிழாவை முன்னிட்டு வருகிற மார்ச் 2ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதனை ஈடு செய்யும் வகையில் வருகிற மார்ச் 14ஆம் தேதி அலுவலக நாளாகச் செயல்படும்' என தெரிவித்துள்ளார்.