மக்களவை கூட்டம் தொடங்கியதும்
நீட் தேர்வு விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் முழக்கங்களை எழுப்பியதால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது. எம்.பி.க்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து தொடர்ந்து முழக்கமிட்டதை அடுத்து, மக்களவை தொடங்கிய ஒரு நிமிடத்திலேயே ஒத்திவைக்கப்பட்டது.
நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக உடனடியாக
விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
நன்றி: நியூஸ்18