பழனி கோயிலில் குவியும் ஐயப்ப பக்தர்கள்

19பார்த்தது
பழனி கோயிலில் குவியும் ஐயப்ப பக்தர்கள்
திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு தினந்தோறும் பக்தர்கள் பல்வேறு ஊர்களில் இருந்து வருகை தருகின்றனர். தற்போது கார்த்திகை மாத சீசன் என்பதால் நேற்று (நவ., 20) பழனி கோயிலுக்கு வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் தரிசன வழிகளில் நீண்ட நேரம் காத்திருந்து பின்னர் சன்னதி சென்று முருகப்பெருமானை வழிபட்டனர்.