கேரளா: பத்தனம்திட்டாவில் உள்ள உலகப்புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று (ஜன., 14) மகர ஜோதி தரிசனம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு தெரியும் மகரஜோதி தரிசனத்தை காண பக்தர்கள் குவிந்து வருகின்றனர். பொன்னம்பலமேட்டில் 3 முறை ஜோதி வடிவாக ஐயப்பன் காட்சி தர உள்ளார். இதனையொட்டி சபரிமலையில் 2,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.