விருதுநகர் மாவட்டம் கஞ்சம்பட்டியைச் சேர்ந்த மனோகரன் (32), மனைவி மனிஷா (20) உடன் பைக்கில் திரும்பியபோது, கோவில்பட்டி–சாத்தூர் சாலையில் லாரி மோதியதில் மனோகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மனிஷா படுகாயமடைந்து முதலில் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பின்னர் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு 2 மாதம் முன்புதான் திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது.