சென்னை ராயப்புரத்தில், 8 வருடங்களாக காதலித்து விட்டு ஏமாற்றிய காதலனின் திருமணத்தை இளம்பெண் ஒருவர் தடுத்தி நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது, இளம்பெண்ணுக்கு ஆதரவாக வந்தவரை, ராயபுரம் காவல் ஆய்வாளர் சிதம்பர பாரதி முகத்தில் குத்தியதாக தெரிகிறது. இதனை, தவெக எம்எல்ஏ தாமு நேரில் சென்று தட்டிக்கேட்டார். ‘யாரை கேட்டு அடிச்சீங்க?, பொதுமக்களை அடிக்க அதிகாரம் கொடுத்தது யார்’ என எம்எல்ஏ சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.