கல்லூரி காலத்தில் ஒன்றரை ஆண்டுகள் காதலில் இருந்ததாகவும், பின்னர் சுமூகமாகப் பேசிப் பிரிந்துவிட்டதாகவும் இயக்குநர் ஜேசன்
சஞ்சய் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். காதல் தோல்வியின் போது யுவன் சங்கர் ராஜாவின் பாடல்களைத் தொடர்ந்து கேட்டு வந்ததாகக் கூறிய அவர், அதன் பிறகு வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர முடிவெடுத்ததாகப் பகிர்ந்துள்ளார். இயக்குநராக அறிமுகமாகும் அவரது இந்த வெளிப்படையான காதல் அனுபவப் பேச்சு இணையத்தில் ரசிகர்களிடையே தற்போது கவனத்தை ஈர்த்து வருகிறது.