திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே காதலித்து திருமணம் செய்த இளம்பெண்ணை, அவரது தந்தை உள்ளிட்ட 4 பேர் காரில் அழைத்துச் சென்றதாக பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த மணப்பாறை போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து காரை வழிமறித்து, பெண்ணை மீட்டனர். சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்த போலீசார், பெண்ணை அழைத்துச் சென்றது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.