தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஆக.5) தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித்துறைக்கு குறைவான நிதியே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக
திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
திமுக ஆட்சி காலத்தில் பள்ளிக் கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடு தொடர்ந்து ஏறுமுகத்திலேயே இருந்து வந்ததை அவர் சுட்டிக்காட்டினார். மேலும், "கல்வியில் சிறந்த தமிழ்நாடு" என்றென்றும் தொடர்வதை உறுதிசெய்ய வேண்டியது அரசின் தலையாய கடமை என்பதை தவெக அரசு மறந்துவிட கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.