அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு

2பார்த்தது
அந்தமான் கடல் பகுதியில் வரும் அக்.13-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது படிப்படியாக வலுவடைந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் மற்றும் கடலோர பகுதியினர் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நன்றி:PT

தொடர்புடைய செய்தி