தென் கிழக்கு வங்கக்கடலில் நவ.21ல் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 2 நாட்களில் மண்டலமாக வலுவடையக்கூடும் எனவும், வடகிழக்கு பருவமழை அடுத்து வரும் நாட்களில் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.