எல்.பி.ஜி. சிலிண்டர் மற்றும் இண்டக்ஷன் ஸ்டவ் குறித்து ஒப்பீடு வெளியாகியுள்ளது. கேஸ் சிலிண்டரில் சமைக்கும் போது 60% வெப்பம் வெளியில் வீணாகி, 40% வெப்பமே உணவு சமைக்க பயன்படுகிறது. ஆனால் இண்டக்ஷன் ஸ்டவ் பயன்படுத்தும்போது சுமார் 90% வெப்பம் நேரடியாக பாத்திரத்துக்கு கடத்தப்படுகிறது. இதனால் வெப்ப வீணாகும் அளவு குறைவாக இருக்கும். ஒப்பீட்டளவில் Induction Stove பயன்படுத்துவது செலவை குறைக்க உதவும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.