அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே தற்காலிக
போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பிறகு, இந்தியக் கொடியுடன் கூடிய 'ஜக் விக்ரம்' என்ற எல்பிஜி கப்பல் ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்தது. மும்பையைச் சேர்ந்த கிரேட் ஈஸ்டர்ன் ஷிப்பிங் நிறுவனத்திற்குச் சொந்தமான இந்தக் கப்பல், 20,000 டன் எல்பிஜி எரிவாயுவை ஏற்றி வந்து, நேற்று குஜராத் மாநிலம் காண்ட்லா துறைமுகத்திற்கு பாதுகாப்பாக வந்தடைந்தது. இந்த எல்பிஜி ஒதுக்கீடு அடிப்படையில் பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.