இந்தியன் ஆயில் நிறுவனம் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக சுமார் ரூ.50 கோடி வரை வாடகை நிலுவை தொகையை வழங்கவில்லை என கூறி, தமிழகத்தில் எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு எரிவாயு கொண்டு செல்லும் பணி முடங்கியுள்ளதால், மாநிலம் முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.