ஐபிஎல் 2026-ன் 64-வது லீக் போட்டியில் லக்னோ அணி, ராஜஸ்தான் அணிக்கு 221 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ஜெய்ப்பூரில் நடக்கும் இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீசிய ராஜஸ்தானுக்கு எதிராக, லக்னோ 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 220 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ்
96 ரன்களும், ஜோஸ் இங்கிலிஸ் 60 ரன்களும் எடுத்தனர். பிளே-ஆஃப் வாய்ப்பைத் தக்கவைக்க ராஜஸ்தான் இந்த இமாலய இலக்கை விரட்ட வேண்டும்.