இன்று (செப்.07) நிகழ உள்ள சந்திர கிரகணம், 85 நிமிடங்கள் நீடிக்கும். இரவு 8.58 மணிக்கு சந்திரன் முதலில் மங்கலான புறநிழல் பகுதிக்குள் நுழையும். பின்னர் 9.57க்கு பகுதி கிரகணமாக துவங்கும். அந்த கிரகணத்தை எளிதாக பார்க்க முடியும். இரவு 11.01 முதல் நள்ளிரவு 12.33 மணி வரை, சந்திரன் முழுமையாக மறையும். அதிகாலை 1.26 மணிக்கு, சந்திரன் கருநிழல் பகுதியில் இருந்து வெளியேறும். அதிகாலை 2.25க்கு புறநிழல் பகுதியை விட்டு வெளியேறும். கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம்.