புகழ்பெற்ற திரைப்பட பாடலாசிரியர் ந.மா.முத்துக்கூத்தனின் மகனும், பொம்மலாட்டக் கலைஞருமான கலைமாமணி மு.கலைவாணன் சென்னையில் நேற்றிரவு (மே 22) காலமானார். 6000-க்கும் மேற்பட்ட இடங்களில் பொம்மலாட்டக் கலை நிகழ்வுகளை நிகழ்த்தியுள்ளார். பொம்மலாட்டத்தில் வழக்கமான புராணக் கதைகள் அல்லாமல் பகுத்தறிவுக் கதைகளை பரப்பி வந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.