அதிமுகவில் இணைந்தார் மு.க.அழகிரியின் ஆதரவாளர் பி.எம்.மன்னன்

54பார்த்தது
அதிமுகவில் இணைந்தார் மு.க.அழகிரியின் ஆதரவாளர் பி.எம்.மன்னன்
மதுரை முன்னாள் துணை மேயரும் மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளருமான பி.எம்.மன்னன் தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டுள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அவர் அதிமுகவில் இணைந்தார். மேலும் பி.எம்.மன்னனுடன் 50 மேற்பட்ட அவரது ஆதரவாளர்களும் அதிமுகவில் இணைந்தார். அவர்களை ஈபிஎஸ் வரவேற்றார்.