புதுச்சேரியில் இன்று (மார்ச்.1) நரேந்திர மோடி சுமார் ரூ.1,571 கோடி மதிப்பிலான 74 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் இசையமைப்பாளர் கங்கை அமரன் கலந்துகொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “சென்னை - புதுச்சேரி விரைவுச்சாலை உட்பட மக்களுக்கான நிறைய திட்டங்களை பிரதமர் மோடி அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் ஆட்சி ரொம்ப சிறப்பா இருக்கு. எந்த குற்றம் குறையுமில்லை. மக்கள் ரொம்ப சந்தோஷமா இருக்காங்க” என்றார்.