சென்னை ஐஐடி, இணையவழி எம்.டெக் மற்றும் முதுகலை பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. வருகிற 31ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். பணிபுரிவோர், புதிய பட்டதாரிகள் ஆகியோர் நாட்டின் முன்னணிக் கல்வி நிறுவனத்தில் முதுகலைப் படிப்பு படிக்க சிறந்த வாய்ப்பை இந்த பாடத்திட்டங்கள் வழங்குகின்றன. நுழைவுத் தேர்வுகள் வருகிற ஜூன் - ஜூலை மாதங்களில் நடக்கிறது. தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு வருகிற ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் வகுப்புகள் தொடங்கும்.