பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து ஏமாற்றியதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, ஜாய் கிரிசில்டா வெளியிட்ட பதிவால் மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்திற்கு ரூ.12 கோடி வர்த்தக இழப்பு ஏற்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், பதிவுகளை நீக்கி விடுவதாக ஜாய் கிரிசில்டா உறுதி அளித்ததன் பேரில் வழக்கு முடித்து வைக்கப்பட்டது.