முதலமைச்சர்
விஜய் நாளை மதியம் 2.30 மணிக்கு மாமண்டூரில் தொடங்கி சாலை மார்க்கமாக மதுராந்தகம் தொகுதியில் பரப்புரை மேற்கொள்கிறார். தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து வாக்கு சேகரிக்க உள்ள நிலையில், கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர்கள், பள்ளி மாணவ-மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் சாலைவலத்தில் கலந்துகொள்ளக் கூடாது என தவெக தலைமை அறிவுறுத்தியுள்ளது. மேலும், போக்குவரத்திற்கு இடையூறாக யாரும் வாகங்களை நிறுத்துவதோ அல்லது வந்து செல்வதோ கூடாது என கூறப்பட்டுள்ளது.