மதுராந்தகம் தொகுதியில் காலை 11 மணி நிலவரப்படி தற்போது 35.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தாராபுரம் தொகுதியில் 11 மணி நிலவரப்படி 37.28 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதே போல் புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி தொகுதியில் 39.16 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. காலை 7 மணி முதலே வாக்காளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வந்து வாக்களித்து வருகின்றனர். ஒருசில வாக்குச்சாவடிகளில் இவிஎம் மிஷின்களில் கோளாறு ஏற்பட்டுள்ளன.