நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' பட தணிக்கை தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் அமர்வில் இன்று (ஜன.20) விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களும் முழுமையாக நிறைவடைந்ததை தொடர்ந்து, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர். இதனால் படத்தின் வெளியீடு மேலும் தள்ளிப்போகும் சூழல் உருவாகியுள்ளதால், ஆவலுடன் காத்திருந்த ரசிகர்கள் மற்றும் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.