“பெண்களின் பாதுகாப்புக்காக ஆட்சி நடத்துகிறோம் என முதல்வர் கூறுகிறார்; ஆனால் நடப்பது வேறாக உள்ளது” என உயர் நீதிமன்றக் கிளை காட்டமாக விமர்சித்துள்ளது. இளைஞர் ஒருவர் தொடர்ந்த வழக்கில், பாதிக்கப்பட்ட பெண்ணின் மருத்துவ அறிக்கையை அரசுத் தரப்பு துண்டுச்சீட்டில் தாக்கல் செய்தது. இதைப் பார்த்த நீதிபதி, “உடல்நிலையை பரிசோதிக்கச் சொன்னால், கருக்கலைப்பு குறித்து அறிக்கை தந்துள்ளனர்” என நெல்லை மருத்துவக் கல்லூரி டீன் நாளை நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.