மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில் அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ.60 கோடி மதிப்புள்ள 1.79 ஏக்கர் நிலம் முறைகேடாக விற்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், போலீசார் 2 தனிப்படைகளை அமைத்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த வழக்கில் 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2021-ல் அதிமுக ஆட்சிக்காலத்தில் நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக கோயில் அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.