மதுரை வடக்கு தொகுதியை வாங்கியே ஆக வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். மதுரையில் காங்கிரஸ் செயற்குழுவில் இன்று (பிப்., 15) பேசிய அவர், மதுரை வடக்குதான் லட்சியம். அந்த தொகுதி எம்எல்ஏவாக காங்கிரஸ் உறுப்பினர்தான் போக வேண்டும் என தெரிவித்தார். முன்னதாக மாணிக்கம் தாகூரை மதுரை வடக்கு தொகுதி திமுக எம்எல்ஏ கோ.தளபதி கடுமையாக விமர்சித்திருந்தார். இருவருக்கும் இடையே வார்த்தை மோதல் முற்றியுள்ள நிலையில், திமுக, காங்கிரஸ் கூட்டணிக்குள் புகைச்சல் அதிகரித்து வருகிறது.