
சோழவந்தான்: காபி, டீ போட்டு வாக்கு சேகரித்த தவெக வேட்பாளர்
மதுரை மாவட்டம், சோழவந்தான் சட்டமன்றத் தொகுதியில் திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் போட்டியிடும் நிலையில், தவெக வேட்பாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான எம். வி. கருப்பையா, அலங்காநல்லூரை அடுத்த மேலச் சின்னனம் பட்டியில் உள்ள ஒரு டீ கடையில் நின்று, டீ மாஸ்டர் போல் பால், சர்க்கரை சேர்த்து டீ போட்டு, அங்கு கூடியிருந்த மக்களுக்கு வழங்கி ஆதரவு திரட்டினார். இது அப்பகுதியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.





































