மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கொண்டையம்பட்டி பகுதியில், கனிம வளம் ஏற்றி வந்த அதிவேக லாரி ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில், இருசக்கர வாகனம் முழுமையாக நசுங்கியது. விபத்து நடந்த இடத்தில் இருந்த பெட்ரோல் பங்க் CCTV-யில் பதிவான காட்சியில், இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். லாரி ஓட்டுநரின் அஜாக்கிரதையே விபத்திற்குக் காரணம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. குவாரி அனுமதி உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.